[ A+ ] / [ A- ]

எமது சேவைகளைப் பற்றிய கருத்துரை வழங்குவதற்கு

நோயாளர் கவனிப்பின் தரத்திலும் நாம் வழங்கும் சேவைகளிலும் ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவையானது பெருமை கொள்கிறது. எம்மால் இயன்ற உயர் தரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குமாக, நாம் தொழில் நிபுணத்துவமான தரநிலைப் பிரிவை வேலைக்கமர்த்துகின்றோம். இந்தப் பிரிவானது, எமது வாடிக்கையாளர்களையும் மற்றும் எம்முடன் தொடர்பான நிறுவனங்களையும், நாம் வழங்கும் மருத்துவ வாகனம் தொடர்பாக எம்முடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கு அனுமதிக்கின்றது. ஒன்ராரியோ சுகாதார மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு அமைச்சவையால் இடப்பட்ட சட்ட உரிமைக் கட்டளைக்கேற்ப, ரொறன்ரோ மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவ விரைந்தனுப்பு அதிகாரிகள் சேகரித்து வைக்கும் சுகாதாரப் பராமரிப்புக் குறிப்புகளை, எமது சுகாதார மற்றும் சட்டமியற்றும் பதிவுக்குறிப்புத் துறையின் துணையுடன் இணைந்து ஒன்றிணைத்துச் சேகரித்து வைக்கும் சேவையானது இலகுபடுத்தப்படுகின்றது.

தொழில் நிபுணத்துவமான தரநிலைப் பிரிவினர் எமது வாடிக்கையாளர்களது முறையீடு மற்றும் விசாரணைகள் அனைத்தையும் நேரகாலத்திற்கிணங்க முழு விசாரணைக்குட்படுத்தி, பொருத்தமாயின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக அவற்றிற்கான தீர்வுகளையும் நோக்குகின்றார்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு, தயவுசெய்து பின்வரும் இணையப் பக்கத்திற்குச் செல்லவும் (ஆங்கிலத்தில்).
Leave a Comment on Our Service