[ A+ ] / [ A- ]

முதலுதவிச் செயற்பாடுகள்/ CPR

EMD Toronto Paramedic Services தங்களது அன்புக்குரியவரது உயிரைப் பாதுகாப்பதற்கு, முதலுதவி மற்றும் CPR (இதயசுவாசப்பை மீளவுயிர்ப்பிப்பு) ஆகியவற்றைக் கற்பது மட்டுமே உங்களுக்குத் தேவையானதாக இருக்கலாம். மாரடைப்பு, பக்கவாதம் அல்லது வலி என்பன எப்போதும் முன்னறிவுப்பின்றித் தோன்றுவன. நெருப்புக்காயம், எலும்புமுறிவு அல்லது ஒவ்வாமை என்பவற்றை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பாகத் தாங்கள் அறிந்துகொள்ளலாம். முதலுதவியிலும் CPRஇலும் தாங்கள் பெற்றுக்கொள்ளும் பயிற்சியானது அவசர நிலைமைகளுக்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ள தங்களுக்கு உதவும்.

பல்வேறு இடங்களிலும் கிழமையில் ஏழு நாட்களுக்கும், தரம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகள் ஆனது பல்வேறு பயிற்சிகளை வழங்குகின்றது. தரமான முதலுதவி மற்றும் அவசரகால மீட்டெடுப்பு என்பவற்றைக் கொண்டதாக CPR இன் அடிப்படைக் கற்கை நெறிகள் உள்ளன. யாரேனும் ஒருவர் உயிர் பாதுகாப்பாளராவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக்கூடியதான அன்பளிப்புப் பற்றுச்சீட்டினைத் தாங்கள் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தாங்கள் தங்களுக்கென இப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு பயிற்சியாளராவதற்கான எண்ணம் கொள்ளவும்.

இத்தகைய பயிற்சிச் செயற்பாடுகள் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. தங்களுக்கு இதில் ஆர்வம் இருப்பின், தயவுபுரிந்து எமது முதலுதவி/CPR பயிற்சிக்கான இணைய பக்கத்திற்குச் சென்று பார்க்கவும்.
CPR & First Aid Courses