[ A+ ] / [ A- ]

Ambulance
ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகளானது. ரொறன்ரோ நகருக்கான அவசரகால மருத்துவ வண்டிச் சேவைகளை வழங்குகின்றது. 911 என்ற இலக்கத்துடன் எவரேனும் அழைப்பினை ஏற்படுத்தும் போது, ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகள் நோயாளியை அணுகி, சிகிச்சையளிப்பதோடு அவரை மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவுக்கு அனுப்பி வைக்கும். ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகளானது, கனடாவிலுள்ள மிகப்பெரிய நகர நில மருத்துவ வண்டிச் சேவையாகவும் ரொறன்ரோவிலுள்ள தனித்த அவசரகால மருத்துவ வண்டிச் சேவையாகவும் விளங்குகின்றது.

ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகளானது நகரெங்கும் உயர் தரமான, மருத்துவமனைக்கு முற்பட்டதான கவனிப்பினை வழங்குகிறது.

1997 இலிருந்து ரொறன்ரோ மருத்துவ உதவியாளர் சேவைகளின் மருத்துவ வண்டிச் சேவைகளுக்கான அனைத்து அங்கத்தவர்களும் அத்தாட்சிபெற்ற மருத்துவத் உதவியாளர்களாக உள்ளனர். நோயாளியின் போக்குவரத்துக்கு மேலாக எம்மால் உடனடியானதும் மதிநுட்பமானதுமான நோயாளி பராமரிப்பினை நிகழிடத்திலும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் வழங்கமுடியும் என்பதை இது உணர்த்துகிறது.

ஞாபகத்தில் இருத்திக் கொள்வதற்கு இலகுவான இலக்கமான 911 ஆனது ரொறன்ரோவிலுள்ள அனைத்து அவசரகாலசேவைகளுடனும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவும்: மருத்துவ வண்டிச் சேவை, காவல்துறை மற்றும் தீயணைப்பு. நீங்கள் 911 இனை எங்கிருந்தும் அழைக்கலாம் அத்துடன் எந்தவொரு பொதுத் தொலைபேசியிலிருந்தும் இவ் அழைப்பு இலவசமானது.


911
அவசரகால மருத்துவத் தேவைகளின் போது மருத்துவ உதவியாளர் சேவைகளுக்கு 911 என்ற இலக்கத்தை அழைக்கவும்


911 in any language